Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சந்திரபாபு நாயுடு சிறப்பு திருப்பதி பிரசாதம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசாதம் வழங்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநில அரசியல் தலைவர்களும் கேட்டறிந்து வருகின்றனர். கேரள முதல்வர் பிரனாய், காஷ்மீர் அமைச்சர் உள்ளிட்டவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி முதல்வருக்கு பிரசாரம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ