Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீர மரண ராணுவ குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரி மகனின் நெகிழ வைத்த உதவி!

பெரும்பாலும் நம் குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பார்கள். சில நேரங்களில் நம்மையே ஆச்சர்யப்படுத்தி விடுவார்கள். அப்படி உலகையே அசரவைத்துள்ளான் ஒரு 16 வயது சிறுவன். அதிராஜ் தாகுர்…. 4 மகாராஷ்ட்ரா வீரர்கள் உட்பட 19 ராணுவ வீரர்கள், செப்.28-ம் தேதி நடந்த உரி தாக்குதலில் பலியாகி உள்ளனர். பலரும் பாகிஸ்தானிய படங்களெல்லாம் இங்கு திரையிடுவதை தடுக்கவேண்டுமென தங்கள் உரிமைகுறித்த குரல்களை எழுப்பிக்கொண்டிருந்த சமயம் அது…… அந்த நேரத்தில், அதிராஜ் தாகுர் ஒரு விஷயம் செய்கிறார். அந்த ஒரு விஷயம் பலருக்கும் அவரை ஒரு ரோல் மாடலாக மாற்றியுள்ளது…..

ரோல் மாடல் அதிராஜ்:

நேவி சிறுவர் பள்ளியில் படிக்கும் இச்சிறுவன் செய்தது என்ன தெரியுமா? உரி தாக்குதலில் இறந்த நம் நாட்டு வீரர்களின் குழந்தைகளின் பள்ளி கல்விக்காக ரூ.80000 வரை நிதி திரட்டியிருக்கிறார். பலரையும் இவருக்கு ஃபேன்களாக மாற்றியிருக்கும் இந்த நிகழ்வு பற்றி அவரது அம்மா கூறும்போது, “பொதுவாகவே இதுபோன்ற பொறுப்பு மிக்க செயல்களை செய்வது ரொம்ப சிரமம். என்ற போதிலும் என் மகன் இதனை சிறப்பாக செய்துமுடித்துள்ளது எனக்கு மிகவும் பெருமையாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது.”

காரணம் தந்தையின் வாழ்வுதான்:

கோலபா என்ற ஊரைச் சேர்ந்த அதிராஜ் தாகுரின் தந்தை, ஆஷிஷ் தாகுர். ராணுவத்தில் பணிபுரிகிறார். கர்னலான இவர், ஷயுர்ய சக்ரா விருது பெற்றவர் ஆவார். தற்போது, ஸ்ரீநகரில் பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரர்களின் வாழ்க்கையே நிலையில்லா, நிச்சயமில்லா வாழ்க்கை என்ற கோட்பாட்டை இந்த சிறு வயதிலேயே ஆழமாக நம்புகிறான் இச்சிறுவன். மேலும், இந்த உண்மையின் நிதர்சனம் தான் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தற்போது தான் செய்யும் இந்த செயல்கள் என்று கூறுகிறான். 80000 ரூபாய் வரை நிதி திரட்டியதைப்பற்றி கூறும்போது, “உரி தாக்குதல் பற்றி கேள்விப்பட்டவுடன் ரொம்பவே டிஸ்டர்ப் ஆகிவிட்டேன் நான். என் தந்தையும் ராணுவ அதிகாரி என்பதால், இந்த இன்சிடன்ட் என்னை உருத்திக்கொண்டே இருந்தது. இந்த செய்தியைக் கேட்டவுடன் அவர்களது குடும்பத்தினர் படும்பாட்டினைத்தான் நான் முதலில் நினைத்து பார்த்தேன்.” என்கிறார்.

 

எங்களுக்கு தெரிந்த ஆறுதல்:

மேலும் கூறும்போது, “அரசாங்கம் நிச்சயமாக அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை அளித்திருக்கும். தெரிந்திருந்தும் இவ்வாறு எங்கள் குழு பொதுமக்களிடம் இருந்து இழப்பீடு தொகை திரட்டியதுக்கு, ஒரே ஒரு காரணம்…... இராணுவ வீரர்களின் இந்த இறப்பு, அவர்களின் குடும்பத்தை தாண்டி, நாட்டில் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வருத்தம் அளித்துள்ளது. இந்த நாட்டுக்காக அவர்கள் உயிர் நீத்துள்ளபோது, அவர்களது குடும்பத்துக்கு இந்த நாடே பக்கபலமாக இருக்கவேண்டுமல்லவா? அவ்வகையில் நாங்கள் இருக்கிறோம், என்றும் இருப்போம் என்று எடுத்துரைப்பதற்கே” என்கிறார்.

வாட்ஸ்அப் மூலம் நிதி:

“நிதி திரட்டுவதற்காக வாட்ஸ்அப்பில் தனியாக க்ரூப் ஒன்றை ஆரம்பித்தோம். நிதிதர விருப்பமுள்ளவர்கள், தாமாகவே முன்வந்து எங்கள் க்ரூப்பில் சேர்ந்து பணமளிக்குமாறு கூறி இருந்தோம். ஆச்சர்யம் தரும்விதமாக பலர் முன்வந்து நிதி அளித்தனர். சிலர் காலேஜ் ஃபீஸ் பொறுப்பையும், சிலர் பள்ளி முடிக்கும்வரை ஆகும் செலவையும் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர். அவர்களது இந்த பங்களிப்பு நிஜமாகவே எனக்கு ஆச்சர்யம் அளித்தது என்று தான் கூறவேண்டும்” என்கிறார்.

சரிசெய்யப்பட்ட சில குடும்பங்கள்:

இந்த நிதி திரட்டுதலினால் நடந்த நல்லது என்ன தெரியுமா? உரிதாக்குதலில் பலியான கலெண்டே மற்றும் விகாஸ் ஆகிய இருவரின் இரண்டு குழந்தைகளுக்கும் (இரு குழந்தையுமே 10 மாதக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது) சிறந்த ஆதாயம் கிடைத்துள்ளது. மற்றொரு வீரரின் மகன் ஜம்முவில் 12-ம் வகுப்பு அறிவியல் குரூப் படிக்கும் மாணவர். அவருடைய படிப்பிற்கென்று தொகைகள் திரட்டுப்பட்டுள்ளன. திரட்டிய தொகைகள் அனைத்தையும் செக்.காக அவர்கள் கையில் கொடுக்க அதிராஜ் நேரடியாக செல்ல திட்டமிட்டுள்ளாராம்.

நம் சார்பில் வாழ்த்துகள் ஒன்றை சொல்லி வைப்போம்!!!! வாழ்த்துகள் அதிராஜ்!!!!!

- ஜெ. நிவேதா,
மாணவப் பத்திரிகையாளர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ