Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சி.பி.ஐ டைரக்டர் பதவி...! ரேஸில் இரண்டு பெண் அதிகாரிகள் .

 

இந்திய அரசின் மத்திய புலனாய்வுத் துறை(சி.பி.ஐ.)யின் அடுத்த டைரக்டராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது, இப்போதைய பரபரக் கேள்வி! தற்போது அதன் தலைவராக இருக்கும் அனில் குமார் சின்ஹா பணிக்காலம் விரைவில் முடிவடைவதால், அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருக்கிறது மத்திய அரசு. 


'அடுத்த தலைவர் யார்?' என்கிற பரிசீலையில் 1979, 1980 மற்றும் 1981..ஆகிய மூன்று வருட ஐ.பி.எஸ். பேட்ஜில் உள்ள சிலரது பெயர்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் இரண்டு பெண்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். இதுவரை சி.பி.ஐ. தலைவர்களாகப் பெண்கள் இடம் பிடித்ததே இல்லை.திருமதி. அர்ச்சனா ராமசுந்தரம் மற்றும் மீரா போர்வங்கர் இருவரின் பெயர்களும் இடம்பிடித்து இருப்பதாகவும், இவர்களில் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.


1980-ம் வருட ஐ.பி.எஸ். பேட்ஜை சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம், தமிழக கேடர் அதிகாரி. வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் துணை நிலை ராணுவப் படை சாஸ்டிரா சேமா பால் (Director General of Sashastra Seema Bal) யின் டைரக்டராக இருக்கிறார். இந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி அர்ச்சனா. இவர் சி.பி.ஐ-யில் பல வருடங்கள் பல்வேறு பதவிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


1981-ம் வருட ஐ.பி.எஸ. பேட்ஜை சேர்ந்த மீரான் போர்வாங்கர். மகராஷ்டிரா கேடர் அதிகாரி. டெல்லியில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையின் டைரக்டராக (Director General, Bureau of Police Research and Development) இருக்கிறார் மீரான். 
இவர்களைப் போலவே, திறமையான அதிகாரிகள் பலர் மத்திய அரசின் பரிசீலனையில் இடம்பிடித்துள்ளனர். 
இத்தனை போட்டி இருந்தும், தலைமைப் பதவிக்கு ஒரு பெண் அதிகாரிதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சிபிஜ வட்டாரத்தில் பலமாகப் பேசப்படுகிறது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மத்திய புலனாய்வுத்துறையின் வரலாற்றில் பெண்களுக்கான சாதனைப் பக்கமாக எழுதப்படும்.


பெண்களிடம் வீடு முதல் நாடுவரை ஒப்படைத்திருக்கிறோம். புலனாய்வுத்துறையின் தலைமையையும் அவர்கள் அலங்கரிக்கும்போது, அவர்களை வாழ்த்தக் காத்திருப்போம்!

 


- எஸ்.எம்.கோமதி
(மாணவப் பத்திரிகையாளர்)  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ