Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனைவி சடலத்துடன் வாழ்ந்து வந்த முதியவர்

டெல்லியில், கல்காஜி என்னும் பகுதியில், மனநலம் சரியில்லாத முதியவர் ஜெத்தானி (90), தன் மனைவி கோபியின் (85) இறந்த சடலத்துடன் மூன்று நாட்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதுகுறித்து ஜெத்தானியின் பக்கத்து வீட்டுகாரர் தந்த புகாரின் பேரில் போலீசார் அவரின் வீட்டுக்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் புழுக்களுடன் இருந்த கோபியின் உடலை மீட்டு தகனம் செய்துள்ளனர். ’குழந்தைகள் இல்லாத ஜெத்தானி உறவினர்களாலும், பக்கத்து வீட்டுகாரர்களாலும் ஒதுக்கப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்.

தனக்கு ஒரே துணையான மனைவி இறந்து போன பிறகும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனைவி உயிரோடு இருப்பதாக கற்பனை செய்து வாழ்ந்து வந்திருக்கிறார், அவர் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை’, என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ