Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரளாவில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க. அழைப்பு

கேரள மாநிலம் கன்னூர் அருகே ரமித் என்ற பாஜக தொண்டர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த ஊரில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று காலை நடந்த இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து நாளை அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அம்மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கன்னூர் மாவட்டத்தில் மோகனன் என்ற மார்க்ஸிட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியைச் சேர்ந்த தொண்டர் கொலை செய்யப்பட்டார். அம்மாநிலத்தில் பாஜகவினருக்கும், கம்யூனிஸ்ட்டு கட்சியினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் சூழலில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ