Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

56 மணி நேரத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது பாம்பூர் என்கவுன்டர்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சில நாட்கள் முன்பு மாநில அரசுக்குச் சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகத்தின் உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த 56 மணி நேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்துள்ளது. 

கட்டடத்தில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுவிட்டன என ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள மேஜர் ஜெனரல் அசோக் நரூளா, ‘ பாம்பூர் என்கவுன்டர் முடிவுக்கு வந்துவிட்டது. பதுங்கியிருந்த இருவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம், அவர்கள் பதுங்கியிருந்த கட்டடம் 50 அறைகளை கொண்ட மிகப்பெரிய கட்டடம், எனவே மிக தந்திரமாக தாக்குதல் நடத்த வேண்டியிருந்தது. அதனால்தான் கட்டடத்தை கைப்பற்ற 56 மணி நேரங்கள் ஆனது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் வலுத்துள்ளது’, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close