Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை ஆதரிக்கிறதா அமெரிக்கா?

உரி தாக்குதலுக்கு இந்தியா ராணுவ ரீதியில் பதிலடி கொடுப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ள முடிவதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. கடந்த செப்டம்பர் 18 இந்திய ராணுவம் எல்லை கடந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பாகவே அமெரிக்கா இந்தக் கருத்தை கூறியுள்ளது. 

 

 

இரு நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக பிரச்னைகள் இருப்பதால், இதைப் போல் தாக்குதலுக்கு முன்பு எச்சரிக்கை அவசியமென்றும் கூறியுள்ளது அமெரிக்கா. உரி தாக்குதலை இந்தியா, தீவிரவாதிகள் மீது நடத்திய தாக்குதல் என்றாலும், பாகிஸ்தான் அதை, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது நிகழ்த்தும் எல்லைத் தாண்டிய தாக்குதல் என்றே கூறிவருகிறது.

சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி பாகிஸ்தானின் உயர் ஆணையாளர் அப்துல் பஸித் கூறும்போது, 'எவ்விதமான சர்ஜிகல் ஸ்ட்ரைக்கும் நடைபெறவில்லை. இந்திய படைகள் எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, அப்போதே பாகிஸ்தான் உரிய முறையில் பதிலடி கொடுத்தது.'

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close