Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் சர்க்கரை வியாதியால் இறப்பவர்களின் எண்ணிக்கை 50% அதிகரிப்பு

இந்தியாவில் சர்க்கரை வியாதியால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகளில் 50% அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 3,46,000 பேர் சர்க்கரை வியாதியால் இறந்துள்ளனர். அதாவது 1 லட்சம் மக்களில் 26 பேர் சர்க்கரை வியாதியால் இறக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. 69.1 மில்லியனுடன் இந்தியா சர்க்கரை வியாதியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் சர்க்கரை வியாதியால் பாதிப்பு ஏற்படுகின்றதாம். ஆனால், இந்தியாவில் 40-59 வயது மதிக்கத்தக்கவர்களுக்கு தான் அதிகளவு சர்க்கரை வியாதி வருகிறதாம்.
2040-ம் ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123 மில்லியனாக இருக்குமாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close