Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

50 ஐடி நிறுவன தகவல்களை திருடிய பாகிஸ்தான் ஹேக்கர்கள்

ஐதராபாத்தில் முன்னனி ஐடி நிறுவனங்களின் இணைய தகவல்கள், பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சைபர் க்ரைம் தெரிவித்துள்ளது.

கடந்த பத்து நாட்களில் 50 ஐடி நிறுவனங்களின் தகவல்களை  'ransomware' மூலமாக திருடியுள்ளனர். டிகிரிப்ஷன் கீக்களை திரும்ப பெற ஐடி நிறுவனங்களிடம் பிணைத்தொகையாக பிட்காயின்களை கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு ஐடி நிறுவனத்தின் மொத்த தகவல்களை திருடி, அதற்கு பிணைத்தொகையாக 420 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சம் பிட் காயின்களை கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த ஹேக்கர்கள் தந்திரமாக சோமாலியா, துருக்கி, சவுதி போன்ற  நாடுகளின் ஐபி முகவரியில் செயல்பட்டுள்ளனர். இது மேலும் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் க்ரைம் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ