Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீன பட்டாசுகள் புறக்கணிப்பு : டெல்லி விற்பனையாளர்களுக்கு பேரிழப்பு

உரி தாக்குதல் விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதால் தீபாவளிக்கு சீன தயாரிப்பு பட்டாசுகளை பயன்படுத்தக் கூடாது என டெல்லியில் அரசியல் தலைவர்கள் பலரும் கூறிவருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இதைப் பற்றிய பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே மக்கள் சீன பாட்டாசுகள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பழைய டெல்லியில் பட்டாசு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பெரும் அளவில் இழப்புகளை சந்தித்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். 


’நான்கு மாதங்கள் முன்னரே சீன பட்டாசுகளை மொத்தமாக வாங்கி கிடங்கில் வைத்துவிட்டோம். தற்போது அரசு சீன பட்டாசுகளை வாங்க வேண்டாம் என பிரசாரம் செய்து வருவதால் மக்கள் சீன பட்டாசுகளை புறக்கணித்துவிட்டனர். வருடத்துக்கு ஒருமுறை செய்யும் பட்டாசு விற்பனை தான் எங்கள் வாழ்வாதாரம். இதற்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்’ என கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close