Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜம்முவில் ஐஐஎம் அமைக்க ஒமர் அப்துல்லா எதிர்ப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு பகுதியில் ஐஐஎம்-ஐ அமைப்பதற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல்தலைவர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமது எதிர்ப்பை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ஜம்மு பகுதியில் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி) அமைப்பதற்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
இந்நிலையில், ஜம்மு பகுதியிலேயே இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்) அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, ஒருதலைசார்பான அரசியல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக - மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில் வியப்பேதுமில்லை என்றும், மாநிலத்தில் பிராந்திய அளவில் சமநிலை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் தற்போது காணாமல் போய்விட்டதாகவும் ஒமர் கூறியுள்ளார்.

மேலும், ஆட்சியில் நிலைத்திருப்பதற்காக, முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி தனது அரசியல் குறிக்கோளையே விற்றுவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ள ஒமர் அப்துல்லா, அவர் தனது ஆன்மாவையே விற்றுவிடுவார் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close