Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைக்கு கூடுதலாக கிருஷ்ணா நீர் திறப்பு

கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர அரசால் தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி 200 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் மேலும் 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திர அரசால் கூடுதலாக திறக்கப்பட்டுள்ள 300 கன அடி நீர் தமிழக எல்லையை வரும் 17-ம் தேதி வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ