Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லி மெட்ரோ ரயிலில் இலவச வை-பை

டெல்லி மெட்ரோ ரயிலில் இலவச வை-பை வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ  ரயில் நிர்வாக மேலாண்மை தலைவர் டாக்டர். மாங்கு சிங் தொடங்கி வைத்தார்.

அதன்படி, ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயிலில் இந்த "Oui DMRC Free Wi-Fi" இலவச வை-பை வசதி இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டெல்லியில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இலவச வை-பை வசதி விரைவில் கொண்டுவர மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த இலவச வைபை வசதிக்காக எம்.எஸ் டெக்னோ சாட் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன்  டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த வை-பை சேவையானது அதிவேகம் கொண்டதாக இருக்கும் என்றும், ஒரு சில நிமிடங்களிலேயே ஒரு திரைப்படத்தை முழுமையாக பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ