Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நூடுல்ஸ், ஜீன்ஸுக்கு அடுத்து பதஞ்சலி பால்

நூடுல்ஸ்லிருந்து ஷாம்பு வரை தன் சந்தையை விரிவுபடுத்தியுள்ள யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி, அடுத்ததாக பால் உற்பத்தியில் கால் பதிக்கவுள்ளது. இந்தியா முழுவதும் பதஞ்சலியின் வெற்றிக்குக் காரணமாக பாபா ராம்தேவ், 'உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தியே உற்பத்தி செய்வதனால்தான்' என்கிறார்.


பால் உற்பத்தியில் ஏற்கெனவே, உலக அளவில் முதலிடத்தில் இருப்பது இந்தியாதான். இந்திலையில் பதஞ்சலி, பால் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு தன் 'உள்நாட்டு உற்பத்தி' எனும் அஸ்திரத்தையும் விட்டுக் கொடுக்காமல், உற்பத்தியிலும் முன்னிலையில் வர புதிய உத்தியை கையாள உள்ளது. 


1940களில் பிரேசிலுக்கு பால் உற்பத்திக்காக எடுத்துச் செல்லப்பட்ட இன பசுக்களின் விந்தணுக்களை, அந்நாட்டில் இருந்து எடுத்து வந்து செயற்கை செறிவுட்டல் மூலம் பசுக்களை உருவாக்க உள்ளனர் பதஞ்சலி நிறுவனம். இந்த பசுக்கள் அதிக பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. மேலும், ஈன்றப்படும் கன்றுகளில் 92 சதவீதம் பசுக் கன்றுகளாகவே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படுமாம். இதனால், அதிக பால் உற்பத்தி சாத்தியமாகும் என்று நம்புகிறது பதஞ்சலி நிறுவனம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ