Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து

கோவா பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா- ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி, ஸ்மார்ட் சிட்டி, உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட 16 ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் கையெழுத்தானது. மேலும், இருநாடுகளும் இணைந்து 200 காமோவ் ஹெலிகாப்டர்களை தயாரிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, "இந்தியா-ரஷ்யா நட்புறவு நீடிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைக்கு ஆதரவு அளித்த, ரஷ்யாவுக்கு பாராட்டு" என்று கூறினார். புடின் பேசுகையில், "இருநாடுகளின் ராணுவம், தொழில் நுட்ப துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளது" என்றார். முன்னதாக இருவரும் இணைந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைக்கான கட்டுமான பணிகளை காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ