Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முலாயம் சிங் யாதவ் அரசியல் நாடகம் ஆடுவதாக பாஜக குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் வாய்ப்பு அகிலேஷ் யாதவிற்கு வழங்கப்படாது என அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியிருப்பது அரசியல் நாடகம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில், புதிய முதலமைச்சர் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார் என்றும் தனது மகன் அகிலேஷ் யாதவிற்கு முதலமைச்சராக தொடர்வதற்கான வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்றும் முலாயம் சிங் யாதவ் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஆளும் சமாஜ்வாடி அரசின் தவறுகளை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவுமே இதுபோன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர்கள் பேசி வருவதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இதுகுறித்து, உத்தரப்பிரதேச மாநில பாஜக பொதுச்செயலாளர் விஜய் பகதூர் பதக் இதுகுறித்து கூறுகையில், சமாஜ்வாடி கட்சியின் இந்த செயல், அகிலேஷ் யாதவுக்கு ஆதரவை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்று கூறியுள்ளார். 
 
மேலும், இது ஒரு அரசியல் தந்திரம் என்றும், அகிலேஷ் யாதவ் அப்பழுக்கற்றவர் என்று கூறுவதற்காக தந்தை மற்றும் மகனின் உச்ச பச்ச அரசியல் நாடகம் என்றும் பகதூர் பதக் குற்றம் சாட்டியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ