Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா, எல்லை பாதுகாப்பைப் பற்றி எங்களிடம் பேசவில்லை - பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் பாதுகாப்பாக மூடுவது பற்றி, சமீபத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளதை அடுத்து, அது பற்றி எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறுவு துறையின் செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறும்போது, ' 2018க்குள் இரு நாட்டு எல்லையையும் மூடி வைப்பது பற்றி எங்களிடம் இந்தியா எதுவும் பேசவில்லை.' என்றார். 


அவர் பக்கத்து நாடுகளுடன் இந்தியா நட்புறவுடன் விரும்புவதாக கூறியதைப் பற்றி பேசும்போது, 'தற்போது காஷ்மீரில் நடந்து வரும் பிரச்னையிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு இந்தியாவின் கடுமையான முயற்சியின் ஒரு பகுதியே இது' என்றார். 'பாகிஸ்தான் இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக சர்வதேச தலையிடுதலை வலியுறுத்தும்' என்றார் அவர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close