Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரணாசி கூட்ட நெரிசல் : 24 பேர் பலி

உத்தரபிரதேசம், வாரணாசியில் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
 

பாபா ஜெய் குருதேவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக  ஆயிரக்கணக்கான பக்தர்கள், சனிக்கிழமை மதியம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள டோம்ரி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்காட் பாலத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் 24 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.


அதிகாரிகளின் பெரும் அலட்சியம் தான் இந்த விபத்திற்கு காரணம் என உ.பி., அரசு தெரிவித்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறிய காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்து உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. 


மேலும் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ளுமாறு வாராணசி ஆணையருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ