Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘தீவிரவாதத்தின் பிறப்பிடம்’ : பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய மோடி

கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், பாகிஸ்தானை ’தீவிரவாதத்தின் பிறப்பிடம்’ என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். 

பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 11 உலக தலைவர்கள்  கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் பேசிய மோடி, ‘ இந்தியாவின் அண்டை நாடு தான் ’தீவிரவாதத்தின் பிறப்பிடம்’ (Mother-Ship Of Terror) என பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசினார்.   


விவசாயம் தொடர்புடைய ஆராய்ச்சிகள், ரயில்வே துறை மேம்பாட்டு ஆய்வுகள், விளையாட்டு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை காணவும், நாட்டின் வளமைக்கு நேரடி அச்சுறுத்தலான பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவும், கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சக தலைவர்களிடம் மோடி கேட்டு கொண்டுள்ளார்.  

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ