Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.36 கோடிக்கு விளம்பரம்: 'ஆப் கி பார் மோடி சர்கார்'

மோடியின் பாஜக அரசு தனது இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிக்காக ரூ. 36 கோடியை விளம்பரத்துக்கு செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது இரண்டாம் ஆண்டு நிறைவு அடைந்ததற்கு நாளிதழ்கள், டிவி சேனல்களில் விளம்பரம் கொடுக்கப்பட்ட தொகை மற்றும் டெல்லியில் நடைபெற்ற நிறைவு விழா என மொத்தம் ரூ.36 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.


தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது இரண்டாம் ஆண்டு நிறைவு அடைந்ததற்கு நாடு முழுவதும் உள்ள நாளிதழ்கள் தனது திட்டங்கள் குறித்த விளம்பரங்களை கொடுத்திருந்தது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அதிகம் விளம்பரம் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close