Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம்னி பஸ்களை பின்பற்றும் ரயில்வே துறை

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தொடர்ந்து, ரயில்வே துறையும் சமீபகாலமாக அதையே பின்பற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'சுவிதா ரயில்' என்ற பெயரில் இயக்கப்படும்  சிறப்பு ரயில்களில், சொகுசு வசதிகள் கூடிய பெட்டிகள் மட்டுமே இருக்கும். பண்டிகை காலங்களில் மட்டுமே இயக்கப்படும் இவ்வகை ரயில்களில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 


சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இருப்பதால், ஆம்னி பஸ்கள் கிடைக்காத பயணிகள் இவ்வகை ரயில்களில் பயணிக்கின்றனர். தனியார் பேருந்துகளைப் போல் அரசாங்கத்தால் இயக்கப்படும் ரயில்களிலும் இதைப்போல் அதிகக் கட்டணம் வசூலிப்பது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில், சுவிதா ரயிலில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close