Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷாருக்கானை தொடர்ந்து உமர் அப்துல்லாவை கோவப்படுத்திய அமெரிக்கா

நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்காக இரண்டு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் முன்னால் முதல் மந்திரி உமர் அப்துல்லா ட்விட்டரில் கடுமையாக அமெரிக்காவை சாடியுள்ளார். 


நியூயார்க் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக  உமர் அப்துல்லா அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். நியூயார்க் நகர் விமான நிலையத்தில் அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை சரிபார்த்த குடியுரிமைத்துறை அதிகாரிகள், மறுபரிசீலனைக்காக சுமார் இரண்டு மணிநேரம் அங்கு காக்க வைத்துள்ளனர்.


இதைப் பற்றி ட்விட்டரில் பகிர்ந்த உமர், ‘மூன்றுமுறை அமெரிக்காவுக்கு வந்தபோதும் இதேபோல் தான் நடந்தது. இரண்டு மணிநேரம் வீணாகி விட்டது. சலிப்பை ஏற்படுத்திவிட்டனர். ஷாருக்கானைப்போல் போக்கிமான் எதையும் நான் இங்கு பிடிக்கவில்லை. இதைவிட நான் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்’ என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஆகஸ்ட் மாதம் ஷாருக்கானை லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் சோதனைக்காக அதிக நேரம் காத்திருக்க வைத்தனர். ஷாருக் தனது ட்விட்டர் பக்கத்தில், ’இதுபோன்ற சோதைனைகள் வெறுப்பையூட்டுகிறது, இங்கு காத்திருந்த  நேரத்தில் போக்கிமான் பிடித்தது தான் மிச்சம்’ என ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது. 


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close