Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்னாப் கோஸ்வாமிக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு

டைம்ஸ் நவ் எடிட்டராக உள்ள கோஸ்வாமிக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்துள்ளதாக உளவு துறை கூறியுள்ளது. இதனால், அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பின் மூலம், அவருக்கு இருபது காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பர். 

கோஸ்வாமி,பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான கருத்தை டைம்ஸ் நவ் தொலைகாட்சியில் கூறியுள்ளதால், சம்பந்தப்பட்ட பயங்கரவாத குழுவிடமிருந்து இந்த அச்சுறுத்தல் வந்துள்ளதாக உளவுத் துறை கூறியுள்ளது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close