Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்துக்கு 2017- மே வரை 160 டி.எம்.சி தண்ணீர் தேவை - ஜா குழு அறிக்கை

தமிழகத்தில் சம்பா சாகுபடி மட்டுமே நடந்திருப்பதாகவும் எனவே 2016-ம் ஆண்டு  அக்டோபர் மாதம் முதல், 2017 மே வரையில் 160 டி.எம்.சி. தண்ணீர் தேவை எனவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று  காவிரி உயர்மட்ட தொழில் நுட்பக்குழு  தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் குடிநீர் தேவைக்காக 22 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாக உயர்மட்ட தொழில் நுட்பக்குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு 12 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு 133 டிஎம்சி நீர் தேவை என்றும், தமிழகத்துக்கு அக்டோபர் முதல் 2017 மே வரை 160 டி.எம்.சி. தண்ணீர் தேவை எனவும் ஜா குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, கர்நாடகாவுக்கு 2017-ம் ஆண்டு மே மாதம் வரையில், 65.48 டி.எம்.சி தண்ணீர் தேவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர் மேலாண்மைக்கு புதிய முறைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ