Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய பாஜ., தலைவரின் மகனுக்கு வலைவீச்சு

சத்தீஸ்கரில் மகாசமுந்த் என்னும் பகுதியில் 32 வயது பெண்ணை ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பாஜக தலைவர் ஒருவரின் மகன் பிரின்ஸ் சலுஜா என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


கடந்த செவ்வாய் இரவு பிரின்ஸ் மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் சேர்ந்து அந்த பெண்ணை வீட்டில் இருந்து கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவில் பதிவுசெய்து, காவல்துறையில் புகார் அளித்தால் அந்த விடியோ பதிவை இணையத்தில் பகிர்ந்து விடுவதாக அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். 


பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தற்போது பிரின்ஸின் நண்பர்கள் தேவேந்திரா மற்றும் பாரித் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரின்ஸ் தலைமறைவாகியுள்ளார்.  பிரின்ஸின் தந்தை துணை மாவட்ட அளவில்  பாஜ., கட்சியில் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ