Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் கால் சென்டர் மோசடி மன்னனை வழிநடத்தியது இவர் தானாம்!

மும்பை மிரா கால் சென்டர் மோசடியில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி ஷாகியை வழி நடத்தியதாகக் கூறப்படும் ஜெகதீஷ் கனானி கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில், வரி செலுத்தத் தவறிய அமெரிக்கர்களை தேர்ந்தெடுத்து, அமெரிக்க வருமான வரித்துறையினர் போல் பேசி அவர்களை மிரட்டி 500 கோடி ரூபாய் வரை ஏமாற்றியிருந்தனர்.


 இதுவரை இந்த வழக்கில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மிகப்பெரிய மோசடி சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது சாகர் தக்கார்  (ஷாகியை) என்னும் 23 வயது இளைஞர் தான் என்றும் ஷாகி தலைமறைவாகிவிட்டதாகவும்  சில நாட்கள் முன்பு காவல்துறை அறிவித்திருந்தனர். 


இந்நிலையில் ஷாகியை வழிநடத்திய ஆசான் ஜெகதீஷ் கனானியை, பொரிவாலியில் மும்பை போலீஸ் அதிரடியாக  நேற்றிரவு கைது செய்துள்ளனர். ஜெகதீஷ் 2010 இல் அகமதாபாத்தில் தொடங்கிய  போலி கால்சென்டரில் தான் ஷாகி முதன்முதலில் மோசடி செய்ய பயிற்சி எடுத்துள்ளார். பின்னர் சொந்தமாக போலி கால் சென்டர் தொடங்கிவிட்டார். ஷாகி பற்றியும் மோசடி பற்றியும் ஜெகதீஷிடம் போலிசார்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ