Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாதிப் பிரச்னை - மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய‌ ஹைத்ராபாத் மாணவன்?

ல்கலைகழகம் சாதி சார்ந்து வேறுபாட்டுடன் நடந்துகொள்வதாக மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ஒருவர்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பைப் படித்துவந்தவர் ஸ்ரீராமுலு. இவர் பழங்குடி இன வகுப்பைப் சேர்ந்தவர். ‘‘நான், இ.எஃப்.எல் யுனிவர்சிட்டியில், ஜெர்மன் கல்வித் துறையில் பயின்றேன். தற்போது அந்தப் பல்கலைக்கழகம் என்னுடைய சான்றிதழ்களைத் தர மறுக்கிறது. மேலும், நான் விரும்பிய இளநிலை பட்டப்படிப்பைப் படிக்க அனுமதி வழங்கவில்லை. இந்தியாவிலேயே ஜெர்மன் மொழியில் யு.ஜி.சி நெட் மற்றும் ஜே.ஆர்.எஃப் ஆகிய படிப்புகளில் முதல் மாணவனான தேர்ச்சி பெற்ற எனக்கு, இளநிலை பட்டப்படிப்பைப் படிக்க ஹைதராபாத் பல்கலைகழகம் என்னுடைய ஐந்து வருட கல்விச் சான்றிதழைத் தர மறுக்கிறது’’ என ஒரு பிரபல நாளேட்டுக்கு ஸ்ரீராமுலு பேட்டியளித்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பழங்குடி நலத்துறை அமைச்சகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியோருக்கு, பல்கலைகழகம் சாதி சார்ந்து வேறுபாட்டுடன் நடந்துகொள்வதாக அந்தப் பதிவைக் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார் ஸ்ரீராமுலு. 2013-ம் ஆண்டு, பல்கலைக்கழகம் வேண்டுமென்றே அவரை 8 பாடங்களில் தேர்ச்சி அடையாமல் செய்ததாகவும், தேர்வு நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

அதே ஆண்டு, அவர் அந்தப் பல்கலைகழக ஜெர்மானிய துறை டீன் மீது இரண்டு வழக்குகள் போட்டார். அதில், ‘‘துணைத்தேர்வில் நான் பங்கேற்று... அதில், 68 சதவிகித மதிபெண்கள் பெற்றேன். மேலும், என்னுடைய மற்ற சான்றிதழ்கள், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் அனைத்தையும் என் அறையில் வைத்துப் பூட்டிவிட்டனர்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஸ்ரீராமுலு சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இ.எஃப்.எல் பல்கலைக்கழகத்தின் ஜெர்மன் துறை துணைப் பேராசிரியர் ஜான் மேத்யூஸ், ‘‘ராமுலு, 5 வருட படிப்பை முடிக்கத் தவறிவிட்டார். அதனால், அவருக்கு இளநிலை படிப்பைப் படிக்க அனுமதி வழக்கவில்லை’’ என்று பதில் அளித்துள்ளார்.

இ.எஃப்.எல்-ன் பிராக்டர் (proctor) பிரகாஷ் கோனா, ‘‘கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்ரீராமுலு பல்கலைக்கழக துணைத்தலைவர் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறார். உண்மையில், ஒரு டிகிரி முடிக்கத் தேவைப்படும் அடிப்படைத் தேவைகள்கூட அவரிடம் இல்லை. எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் அவர் சாதியை இணைத்துக்கொள்கிறார்’’ என்றார்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சாதி, இன வேறுபாடுகளில் பாதிக்கப்படுவது ஸ்ரீராமுலு  மட்டும் இல்லை. இதேபோல சில மாதங்களுக்கு முன்பு ரோஹித் வெமுலா என்ற மாணவருடைய செய்திகளும் சர்ச்சைக்கு உள்ளானது.

என்ன நடக்கிறது கல்வி நிலையங்களில்...?

- நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ