Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிசிசிஐக்கு கால அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம் 

லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த பிசிசிஐக்கு கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ) நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ‘இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பதவியில் இருக்கக்கூடாது, ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டுரிமை, இரண்டு முறை பதவி வகித்தால் அடுத்த முறை பதவிக்கு வருவதற்கு 3 ஆண்டு கால இடைவெளி இருக்க வேண்டும், ஐ.பி.எல். போட்டிக்கும் அடுத்து வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும் 15 நாட்கள் இடைவெளி தேவை இப்படி பல பரிந்துரைகளைச் செய்திருந்தது. அதற்கு ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்றம், பரிந்துரைகளை நிறைவேற்றும்படி கிரிக்கெட் வாரியத்தை அறிவுறுத்தியது. ஆனால், இதில் சிலவற்றை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியமான பரிந்துரைகளை அமல்படுத்த தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், லோதா கமிட்டியின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த பிசிசிஐக்கு கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close