Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அரசை மிரட்டும் மார்கண்டேய கட்ஜு

மார்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் கவனத்துக்கு என்று ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்  ' முதல்வர் ஜெ., பூரண குணமடைய நான் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துள்ளேன். இந்நிலையில் ஜெ., உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதாக பலர் கைது செய்யப்படுகிறார்கள். எந்த அடிப்படையில் இதை செய்கிறீர்கள்?  அங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் கிடையாதா? 


இதுபோன்ற கொடுங்கோல் ஆட்சியை நிறுத்தாவிட்டால் 356-வது சட்ட பிரிவுபடி தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரணாப்பிடம் முறையிடுவேன். குடியரசுத் தலைவர் ஆட்சி  அமல்படுத்தப்பட்ட பிறகு உங்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, போர் குற்றம் புரிந்த ஜெர்மனியின் நாஜிக்களுக்கு கிடைத்த தண்டனை போல், உங்களுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தருவேன்'. என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ