Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 22 பேர் பலி

ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் 120 வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால், 2-வது தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.


இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ட்வீட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இதில் காயமடைந்த நோயாளிகளுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ