Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி விவகாரம்:உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவிரி உயர்மட்டக் குழு ஆய்வு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்திருப்பதால், அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் இன்று சில உத்தரவுகள் பிறப்பிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு, நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் தாக்கல் செய்த மனு, தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சார்பில் விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ