Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி கவுன்சில் சந்திப்பு இன்று ஆரம்பம்

ஜி.எஸ்.டி அல்லது சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சிலின் மூன்று நாள் சந்திப்பு இன்று ஆரம்பமாகிறது. இந்த சந்திப்பில், ஜி.எஸ்.டி-க்கான வரி வரம்பு அளவு மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்படவிருக்கும் வருவாய் இழப்பு பற்றி விவாதிக்கப்பட உள்ளது. வரும் நவம்பர் 16 முதல் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், ஜி.எஸ்.டி-க்காக இன்று ஆரம்பிக்கும் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.


சரக்கு மற்றும் சேவைகள் வரி மசோதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி குடியரசுத் தலைவரால் அனுமதியளிக்கப்பட்டது. ஏப்ரல் 1, 2017க்குள் இந்த மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு முனைகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close