Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2017க்கான பட்ஜெட் பிப்., ஒன்றில் தாக்கல் செய்யப்படலாம்

அடுத்த வருடம் ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் மார்ச் மற்றும் எப்ரல் மாதங்களில் நடக்கவிருப்பதால், பொதுவாக பிப்ரவரி கடைசி தேதியில் தாக்கல் செய்யப்படும் மத்திய அரிசின் பட்ஜெட், இம்முறை பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகர் அருண் ஜேட்லி பிரதமர் நரந்திர மோடியுடன் இந்த வாரம் கலந்துரையாட உள்ளனர்.

அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்கும் என்பதால்,தேர்தல் ஆணையமும் பட்ஜெட்டை முன்னரே தாக்கல செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முறை ரயில்வே பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்படாது என்பது குறிப்படத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்