Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்து வருகிறது. தமிழகம், கர்நாடகா தரப்பில் வாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், காவிரி மேல்முறையீட்டு வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சான அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யலாம் என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், காவிரி வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு விசாரிப்பது என்பது பரிசீலனை்ககுரியது. இந்த கோரிக்கை பற்றி அரசியல் சாசனத்தின்படி முடிவு எடுக்கப்படும் என்று கூறியது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ