Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.பி.எல் உடன் கைக்கோர்க்கும் ஃபேஸ்புக்

ஐ.பி.எல். டிஜிட்டல் ரைட்ஸ்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜியோ,அமேசான், ட்வீட்டர், ஸ்டார் குழுமம், சோனி குழுமம் ஆகியவைகள் ஐ.பி.எல் டிஜிட்டல் ரைட்ஸை வாங்கியுள்ளன. இந்த லிஸ்டில் ஃபேஸ்புக்கும் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.பி.எல். போட்டிகளின்போது ஃபேஸ்புக்கில் செம ரீச்சாம். ஐ.பி.எல் தொடர்பான பதிவுகள், கமெண்ட்ஸ்கள் மில்லியனில் குவிவதால் அதன் டிஜிட்டல் ரைட்ஸை வாங்குவதற்கு ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது.


குறிப்பாக இந்தாண்டு ஐ.பி.எல்-ன்போது மட்டும் அது தொடர்பாக 360 மில்லியன் பதிவுகள், கமெண்ட்ஸ்கள், லைக்குகள் கொட்டியதாம். மேலும், ஐ.பி.எல். தொடர்பான வீடியோக்கள் 140 மில்லியன்கள் வ்யூவ்ஸ்க்கு சென்றதாம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ