Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேச நலன்தான் எனக்கு முக்கியம்- கரன் ஜோஹர்

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருந்து வரும் சர்ச்சை காரணமாக, பாலிவுட் படங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் நடிக்கக் கூடாது என்று பிரச்னை எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரன் ஜோஹர் இயக்கி வெளியாகவிருக்கும் பாலிவுட் படத்தில், பாகிஸ்தானியர்கள் நடித்துள்ளதால் அந்த படத்துக்கு எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டது. 


இந்த விஷயம் தொடர்பாக, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் சில நாட்களுக்கு முன்பு, ட்விட் செய்திருந்ததும் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக கரன் ஜோஹர், 'நான் எனது படத்தை எடுக்க ஆரம்பிக்கும்போது, இரு நாடுகளுக்குமான நிலைமை வேறாக இருந்தது. தேசப்பற்றை வெளிக்கொணர சிறந்த வழி, நான் செய்யும் வேலையின் மூலம் அன்பை பரப்புவதுதான் என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் முன் எனது நாடு எனக்கு முக்கியம்' என்றார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ