Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவியின் ஃபேஸ்புக் பக்கத்தை பேனராக வைத்து அட்டூழியம்

கொல்கத்தாவில் 21 வயது மாணவி தனது முகநூலில் மம்தா பானர்ஜியை விமர்சித்ததால்,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், டம் டம் என்னும் பகுதியில், அந்த மாணவியின் புகைப்படத்துடன், அவரின் ஃபேஸ்புக் பக்கத்தை பெரிய பேனராக தெருவில் வைத்து, அந்த பெண்ணை அவமானப்படுத்தியுள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை மம்தா பேனர்ஜி துர்கா தேவிக்கான அணிவகுப்பில் கலந்துக் கொண்டதை விமர்சித்து முகநூலில் ராஜஸ்ரீ என்னும் பெண் கருத்து பதிவிட்டிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து ராஜஸ்ரீயின் பக்கத்து வீட்டார் அவரின் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் புகைப்படம் தெருவில் பேனராக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 


ராஜஸ்ரீ வீடு உள்ள டம் டம் தெருவில், 5-அடி உயர பெரிய பேனரில் ராஜஸ்ரீ யின் புகைப்படம் உள்ள அவரின் ஃபேஸ்புக் பக்கத்தின் ஸ்கீரீன்ஷாட் ப்ரிண்ட் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் “Shame on you" என எழுதப்பட்டிருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் சிலர் அந்த பெண் வீட்டிற்கு சென்று மம்தா பேனர்ஜியிடம் மன்னிப்பு கேட்க சொல்லியும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்ரீயின் குடும்பத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close