Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வெட்கித் தலைகுனிகிறேன்'- நரேந்திர மோடி

பஞ்சாபில் நேற்று, தலித்துகள் மற்றும் பழங்குடிகளுக்கான 'தேசிய மையம்' (National hub) ஆரம்பித்து பிரதமர் மோடி பேசும்போது, ' சுதந்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் தலித்துகளுக்கு எதிரான வன்முறை நிகழக்கூடாது. நமது தலித் சகோதரர்களைக் குறி வைத்து இன்றளவும் நடக்கும்  சம்பவங்கள் என்னை வெட்கித் தலை குனிய வைக்கிறது.' என்றார்.


தலித்துகள் மற்றும் பழங்குடிக்களுக்கான தேசிய மையம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டது. பட்ஜெட்டில், இந்த மையத்திற்கென்றே 490 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் இன்னும் மூன்று மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ