Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்டொமொபைல் நிறுவனங்களுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு

2017-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் வாகனங்கள் வெளியிடும் மாசு மற்றும் ஒலி அளவுகளைக் குறித்த முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. 

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சி.என்.ஜி, எல்.பி.ஜி, எலெக்ட்ரிக், ஹைபிரிட் என எந்த எரிபொருளில் ஓடும் வாகனமாக இருந்தாலும், அதற்கான மாசுக் கட்டுப்பாடுத் தகவல்களை அரசிடம் கொடுத்தாக வேண்டும். இதுநாள்வரை மாசுக் கட்டுப்பாடு சட்டங்களின் கீழ் வராமல் இருந்த இ-ரிக்‌ஷாக்களும் இந்த உத்தரவின் கீழ் வருகின்றன. விரைவில், விவசாய, கட்டுமான வாகனங்களை தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம். 

இதற்காக மத்திய மோட்டார் வாகன சட்டம், 1989-ல் ஃபார்ம் 22-வை மாற்றிமைத்துள்ளது அரசு. 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ