Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' முரண்பாடான கருத்து!  காங்கிரஸ் கண்டனம்

ந்திய எல்லையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ராணுவம் நடத்திய 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' பல்வேறு சர்ச்சைகளை ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்த சமீபத்திய கருத்து, இந்த சர்ச்சைகளுக்கு மேலும் பெட்ரோல் ஊற்றுவதுபோல் அமைந்து விட்டது.

"இந்திய ராணுவம் ஏற்கெனவே, இதுபோன்ற சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனும் தீவிரவாத முகாம் அழிப்பு நடவடிக்கைகளை நடத்தியுள்ளது. ஆனால், அப்போதெல்லாம் தாக்குதல் ரகசியமாக வைக்கப்படும்" என ஜெய்சங்கர் பேட்டி அளித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாத முகாம் அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தெரிவித்திருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரோ, இதற்கு முன்னர் இந்திய ராணுவம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதில்லை என்று கூறியிருந்தார். 

பாதுகாப்புத் துறை அமைச்சரின் கருத்தும், வெளியுறவுத்துறைச் செயலாளரின் கருத்தும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதுதான் காங்கிரஸ் எழுப்பியுள்ள புதிய சர்ச்சை.

டெல்லியில் செய்தியாளர்கள் பேட்டியில் கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, "நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பவர், வெளியுறவுத்துறை செயலாளரின் கருத்துக்கு நேர்மாறான கருத்தை தெரிவிப்பது சரியானதா?" என்று வினவியுள்ளார்.

ஏற்கெனவே பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்ததும், வெளியுறவுத்துறை செயலாளர் கூறியிருப்பதும் முரண்பட்டதாக உள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர் என்று அபிஷேக் சிங்வி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 28-ம் தேதியன்று நடத்தப்பட்ட 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்'-ஐ பாரதிய ஜனதா தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருகிறது என்று ஏற்கெனவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போதைய சர்ச்சை மேலும் ஒரு முரண்பாட்டை தொடங்கி வைத்துள்ளது.

"ஏற்கெனவே இதுபோன்ற தீவிரவாத முகாம்கள் அழிப்பு தாக்குதல்கள் நடைபெறவில்லை என்று அரசு மறுக்கக்கூடாது. பா.ஜ.க அரசின் தாக்குதலை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. மத்திய அரசும் பெருந்தன்மையுடன் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும். ராணவத்தினரின் செயல்பாடுகளை அரசியலாக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இப்போது, நாங்கள் கேட்கிறோம். உண்மையை மறைத்து அரசியலாக்க வேண்டாம்" என்று அபிஷேக் சிங்வி கேட்டுக் கொண்டுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கோவா பிரிக்ஸ் மாநாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுத்து பேசினார்.

எல்லாமே தேர்தல் அரசியலாகி விட்டது. உண்மையை யாராலும் அழித்து விட முடியாது என்பதை காங்கிரசும், பா.ஜ.க-வும் உணர வேண்டும்.

- சி. வெங்கட சேது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close