Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே நாளில் 6.26 லட்ச ஸ்டேட் வங்கி டெபிட் கார்டுகள் முடக்கம்

இந்தியா முழுவதும் உள்ள பல ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் (suspicious transactions) கண்டறியப்பட்டதால் 6.26 லட்ச டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. 

டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டதை வாடிக்கையாளர்களுக்கு SMS மற்றும் இமெயில் மூலமாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அவர்களுக்கு புதிய ஏடிஎம் கார்டு வழங்கப்படும் என்றும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.  ஸ்டேட் வங்கியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ஷிவ் குமார் பாசின் இதைப்பற்றி வெளியிட்டுள்ள செய்தியில், “ ஏடிஎம் மையங்கள், malware தாக்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது. விரைவில்  சரி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ