Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நான்கு நாட்கள் ஆகிவிட்டது, என் மகன் எங்கே' : கதறும் ஜெ.என்.யூ மாணவரின் தாய்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜிப் அகமது கடந்த சனிக்கிழமை திடீரென மாயமானார். நஜிப் அகமதின் தாய் பல்கலை., வளாகத்தில் அழுதபடி காத்துக் கொண்டிருக்கிறார். ’என் மகனை நான்கு நாட்களாக காணவில்லை. அவனை தாக்கியவர்கள்  சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். என் மகன் எங்கே’ என  திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். 


இந்நிலையில் விடுதியில் தங்கிப் படித்து வந்த நஜீப்பை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நேற்று நள்ளிரவு முதல் ஜெ.என்.யூ மாணவர்கள் சுமார் 200 பேர் பல்கலைக்கழக வளாகத்தில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மாணவர்களின் திடீர் போராட்டத்தை அறிந்து  ஜெ.என்.யூ வளாகத்தில் போலீஸாரும், பல்வேறு மாணவ அமைப்பினரும் குவியத் தொடங்கியதால் பதற்றம் நிலவி வருகிறது.

ஜெ.என்.யூ விடுதியில் பல்வேறு அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான  நஜிப் அகமதை கண்டுப்பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவர்கள் தரப்பில் கூறியுள்ளனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ