Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒடிசாவில் 3 மருத்துவமனைகளில் மட்டுமே தீ பாதுகாப்பு வசதி: திடுக் தகவல்

ஒடிசாவில் இயங்கி வரும் 568 மருத்துவமனைகளில் மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஒடிசாவில் இரண்டு நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில்,  21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒடிசா அரசு ஏற்கெனவே மருத்துவமனை நிர்வாகம் மீது தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் செய்யவில்லை என்றும் அலட்சியமாக இருந்ததாகவும் இரண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானே முன் வந்து ஒடிசா அரசுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-ம் ஆண்டிலேயே ஒடிசா மருத்துவமனைகளில் தீ விபத்து தடுப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை என எச்சரித்ததாகவும், அதை ஒடிசா அரசு அலட்சியம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒடிசாவில் இயங்கி வரும் 568 மருத்துவமனைகளில் மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், SUM மருத்துவமனையின் உரிமையாளர் மனோஜ் நாயக் இன்று தானாக முன்வந்து போலீஸாரிடம் சரணடைந்துள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close