Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜட்ஜிலே நான் ஒரு ரவுடியாக்கும்'- கட்ஜு

உரியில் நடந்த தாக்குதலுக்கு அடுத்தும், இந்தியாவால் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடர்ந்தும், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான உறவு விரிசல் அதிகமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிய நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று பிரச்னை கிளப்பி வருகின்றனர். 

இதனிடையில், கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளிவர உள்ள பாலிவுட் படத்தில், பாகிஸ்தானிய நடிகர்கள் நடித்துள்ளதால் அந்தப் படத்தை வெளியிட்டால் வன்முறையில் ஈடுபடுவோம் என்று மகாராஷ்டிராவின் நவ்நிர்மான் சேனா கட்சியின் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கு, முன்னால் நீதிபதி கட்ஜு, அவரது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், 'நவ்நிர்மான் சேனா கட்சியினர் அரேபியக் கடலின் உப்பு நீரை குடித்து வளர்ந்தவர்கள், நான் சங்கம் நீரைக் குடித்து வளர்ந்தவன். தைரியம் இருந்தால் அவர்கள் என்னுடன் மோதட்டும். யார் பெரிய ரவுடி என்று பார்த்துவிடுவோம்.' என்று ட்வீட் செய்துள்ளார்.

 


 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ