Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி சிங்கிள் சிங்கம் இல்லை

ஜோத்பூர் மச்சியா உயிரியல் பூங்காவில் இருக்கும் லவ் என்ற ஆண் சிங்கத்துக்கு 19 வயதாகிறது. கடந்த 2008-ம் ஆண்டு இதன் ஜோடி இறந்ததையடுத்து கோட்டா உயிரியல் பூங்காவில் இருந்து இது மச்சியா பூங்காவுக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஜோடியை சேர்க்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து கோட்டா பூங்காவில் இருந்த கௌரி என்ற பெண் சிங்கத்தை இதற்கு ஜோடியாக இணைக்க உள்ளனர்.
லவ்வை விட கௌரி 3 வயது குறைவானது. தற்போது இந்த ஜோடியை நாஹர்கர் உயிரியல் பூங்காவுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மத்திய உயிரியல் ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. தற்போதைய சூழலுக்கு கௌரியை இடமாற்றம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. லவ்வுக்கும் அனுமதி கிடைத்த உடன் இந்த ஜோடியை நாஹர்கர் உயிரியல் பூங்காவில் காணலாம்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ