Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மதமும அரசியலும் சேரக்கூடாது'- உச்ச நீதிமன்றம்

'இந்துத்துவம்' என்ற வார்த்தையையோ அல்லது 'மத உணர்வுகளைத் தூண்டுதல்' என்ற பெயரால் தேர்தல் சமயத்தில் ஓட்டுகளை வாங்க முயற்சிப்பது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக, 1995-ல், அப்போதைய தலைமை நீதிபதி வெர்மா, ' இந்துத்துவம், அல்லது இந்து தேசம்' என்ற வார்த்தைகளை, தேர்தல் நடக்கும்போது  உபயோகிப்பதற்கு எந்த தடையும் இல்லை' என தீர்ப்பளித்தார். இந்துத்துவம் என்பது, 'ஒரு வாழ்க்கை முறை' எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்த தீர்ப்பின் மேல்முறையீடு வழக்குதான், தற்சமயம் உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசரணையின்போது, தாக்கூர், 'நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை மதச்சார்பின்மைதான். மதமும் அரசியலும் சேரக்கூடாது. மதம் அரசியல் நடைமுறைகளிலிருந்து பிரித்து வைக்கப்பட வேண்டும்' என்றார். இந்த வழக்கின் வாதம் வரும் 25-ம் தேதியும் தொடரும்.

 


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close