Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடி-சென்னை இடையேயான இயற்கை எரிவாயு குழாய் பதிப்பு தொடக்கம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தூத்துக்குடி-சென்னை இடையே 1,167 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயற்கை எரிவாயுக்கான குழாய் பதிப்பு வேலைகளை ஆரம்பித்தது. இதன் மூலம், எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, தூத்துகுடி துறைமுகம் வரை கொண்டு செல்லப்படும்.


இது பற்றி ஐ.ஓ.சி, 'முதலில் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், எரிவாயு எடுத்துச் செல்லப்படும், பிறகு படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும். இதன் மூலம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட 11 நகரங்களுக்குத் தேவையான எரிவாயுவை பூர்த்தியடையும்' என்று தெரிவித்தது.

இந்த நிலத்தடி குழாய் திட்டத்தின் மூலம், எல்.பி.ஜி சிலிண்டர்களின் தேவை குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close