Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீகார் துணை முதல்வருக்கு 44 ஆயிரம் ப்ரப்போசல்ஸ்

பீகார் பெண்களின் புதிய ஹீரோ அம்மாநில துணை முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ்தான். 26 வயதாகும் இவரின் வாட்ஸ்அப் நம்பருக்கு 44 ஆயிரம் மேரேஜ் ப்ரப்போசல்ஸ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இவருக்கு மொத்தம் 47 ஆயிரம் மெசேஜ்கள் வந்துள்ளன. அவற்றில் 44 ஆயிரம் திருமண ப்ரப்போசல்ஸ் குறித்து தானாம். 3 ஆயிரம் மெசேஜ்கள் பொது பிரச்னை குறித்து வந்துள்ளதாம். இவர் கிரிக்கெட்டராக இருந்து, அரசியல்வாதியாக மாறியுள்ளார்.

சமீபத்தில் மாணவர் ஒருவர் தனது படிப்புக்கான ஸ்காலர்சிப்கள் சரியாக கிடைப்பதில்லை என்று யாதவுக்கு முகநூலில் கூறியுள்ளார். இதற்கு யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்பிறகு, யாதவின் அனைத்து செயல்பாடுகளுமே ஹிட்தான். ப்ரப்போசல்ஸ்கள் குறித்து யாதவிடம் கேட்டால், "நமக்கு இதெல்லாம் செட் ஆகாது. அரெஞ்ச் மேரேஜ்தான் பாஸ்" என்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ