Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்வியிலிருந்து ஆங்கிலத்தை நீக்குங்கள்- ஆர்.எஸ்.எஸ்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு, ஆர்.எஸ்.எஸ்-ன் கல்வி பிரிவான சிக்‌ஷா சேன்ஸ்கிரிதி உத்தான் நியாஸ் (எஸ்.எஸ் யு.என்) புதிய கல்வி கொள்கை சம்பந்தமாக பரிந்துரைகள் அனுப்பியுள்ளது.

அந்த பரிந்துரையில், 'தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி வரை அவரவர் தாய் மொழியிலே தான் கற்பிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் என்பது கட்டாயப் பாடமாக எந்த நிலையிலும் இருக்கக் கூடாது. அனைத்து ஆய்வுகளும் 'தேசிய தேவைகளை' மையப்படுத்தியே இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், அந்த ஆய்வுகளுக்கு உதவித் தொகை கொடுக்கப்படக் கூடாது. இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நம் எண்ணங்கள், போற்றுதலுக்குரிய நபர்கள் என யாரையாவது இழிவு படுத்துவது போலவோ அல்லது தவறான விவரிப்புகளோ இருக்கும் பதிவுகளை பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தது.

இந்த பரிந்துரைகளுக்கு, ' உங்கள் கருத்துகளை குறித்துக் கொண்டோம். புதிய கல்வி கொள்கையை உருவாக்கும்போது இந்த பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்படும்' என மனிதவள மேம்பாட்டுத் துறை பதிலளித்திருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ