Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்ப்பரேட் கம்பெனி டூ ஆட்டோ டிரைவர்- இது மும்பை மாணிக்கம்

மும்பையைச் சேர்ந்த கார்ப்பரேட் பணியாளர் ஒருவர் தான் ஒரு ஆட்டோ டிரைவர் ஆக வேண்டும் என்பதற்காக தனது கார்ப்பரேட் பணியை விட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "நான் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தேன். தினசரி காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஒரே வேலையை செய்வது எனக்கு சலிப்பு தட்டியது. மேலும், மிகவும் இயந்திரத் தன்மையாக தெரிந்தது.


எனவே, ஒரு நாள் அந்த வேலையை விட்டேன். ஒரு ஆட்டோ வாங்கினேன். தினசரி பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறேன். இதன்மூலம் பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. இதில் பணி நேரம் அதிகம்தான். ஆனால் எனக்கு இது பிடித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் திருப்தியாக உணர்கிறேன். இதன் பிறகு எனது எம்.எஸ்.சி படிப்பையும்முடித்தேன். எனக்கு ஃபோட்டோ கிராஃபி மீதும் ஆர்வம் அதிகம்.

எனது பயணிகளை படம் எடுப்பேன். ஃபோட்டோ ஃகிராஃபிக்காக உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். ஆங்கிலப்புலமையும் உள்ளது. 40 வருடம் ஆகிவிட்டது. உலகின் பெரிய, பெரிய பணக்காரர்களை விட மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்". என்றார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ